சேலம், ஜன.26: ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு-சண்டீகர் இடையிலான போட்டி சேலத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 301, சண்டீகர் 204 ரன் எடுத்தன. பின் 2வது இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. விஜய் சங்கர் அவுட்டாகாமல் 150 எடுத்தார். பின்னர் 2வது இன்னிங்சை நேற்று ஆடிய சண்டீகர் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்து தோல்வியை எதிர்நோக்கி உள்ளது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
The post சண்டீகருக்கு எதிராக தமிழ்நாடு முன்னிலை appeared first on Dinakaran.