சென்னை: சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த பளு தூக்கும் போட்டியில் தங்கம் உட்பட 14 பதக்கங்கள் பெற்ற காவலர்களை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டினார். முதலாவது அகில இந்திய காவல்துறை பளு தூக்கும் குழு போட்டி-2024 சட்டீஸ்கர் மாநிலம் துர்க் நகரில் கடந்த 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டி சட்டீஸ்கர் மாநில காவல்துறையால் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை பளுதூக்கும் குழு மற்றும் வளு தூக்கும் குழுவை சேர்ந்த மொத்தம் 75 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் 1 தங்கம், 3 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை தமிழ்நாடு பளு தூக்கும் அணி பெற்று தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த போட்டில் கலந்து ெகாண்டு பதக்கங்கள் ெவற்றி வீரர்களை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தனது அலவலகத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டி பதக்கங்களை வழங்கினார். இந்த சந்திப்பின்போது, ஆயுதப்படை மற்றும் கடலோர காவல் குழும அதிகாரிகள் உடன் இருந்தனர்.
The post சட்டீஸ்கரில் நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் உட்பட 14 பதக்கங்கள் குவிப்பு: வீரர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு appeared first on Dinakaran.