சட்டீஸ்கரில் அதிரடி 5 நக்சல்கள் சுட்டு கொலை: துப்பாக்கி, வெடிமருந்துகள் பறிமுதல்

3 weeks ago 4

பிஜப்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரில் நக்சல்களை 2026 மார்ச்சுக்குள் ஒழிக்க இலக்கு நிர்ணயித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பிஜப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய வனப்பூங்கா பகுதியையொட்டிய காடுகளில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரிசர்வ் காவல்படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து நக்சல் தேடுதல், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பெண்கள் நக்சல்கள் உள்பட 5 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து தானியங்கி துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் நடப்பாண்டு பாதுகாப்பு படையினர் நடவடிக்கையில் 14 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 6ம் தேதி 4 நக்சல்களும், கடந்த 9ம் தேதி சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 நக்சல்களும் கொல்லப்பட்டனர்.

 

The post சட்டீஸ்கரில் அதிரடி 5 நக்சல்கள் சுட்டு கொலை: துப்பாக்கி, வெடிமருந்துகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article