சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

4 months ago 19

 

ஈரோடு, அக். 16: சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒத்தப்பனை டாஸ்மாக் அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து சோதனையிட்டதில் அவர், அரசு மது பானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.வி.மங்கலம், நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

The post சட்டவிரோதமாக மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article