உத்தரகன்னடா: சட்டவிரோதமாக கடத்திய ரூ.3 லட்சம் மதிப்புள்ள அரிய வகை மரங்களை, வனத்துறையினர் லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரகன்னடா மாவட்டம், சிரசி தாலுகாவில், அரியவகை மரங்கள் கடத்தப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நகரில் உள்ள சந்தன் வுட் ஒர்க்ஸ் மற்றும் பர்னிச்சர் அருகே வந்த ஒரு லாரியை மறித்து சோதனையிட்டனர்.
அதில் அரியவகை மரங்களை வெட்டி 92 துண்டுகளாக வைத்து கடத்தியது தெரிந்தது. இதையடுத்து கடத்தப்பட்ட மரங்களுடன் லாரியை பறிமுதல் செய்தனர். அந்த மரங்களில் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது. மேலும், லாரியில் வந்த 2 பேரை கைது செய்தனர். விசாரணையில், மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாதேவா ராமச்சந்திர வாடா, ஷிர்சி நகரில் உள்ள கொப்பல் காலனியை சேர்ந்த ஜெகதீஷ் மாதேவா குடிகாரா என தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
The post சட்டவிரோதமாக கடத்திய ரூ.3 லட்சம் அரிய வகை மரங்கள் லாரியுடன் பறிமுதல் appeared first on Dinakaran.