சென்னை,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.சட்டம், ஒழுங்கு சீர்கேட்டுக்கு, காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்? .
தொடர் கொலைகளால் இது தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.குற்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.