சட்டமன்ற தொகுதிவாரியாக திமுக பாக இளைஞர்களுக்கு சமூக வலைதள பயிற்சி

6 months ago 20

சென்னை: சட்டமன்ற தொகுதிவாரியாக திமுக பாக இளைஞர்களுக்கு சமூக வலைதள பயிற்சி நடைபெற உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:
திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், பாகத்திற்கு ஒரு இளைஞரை தேர்வு செய்து சட்டமன்ற தொகுதி வாரியாக சமூக வலைதள பயிற்சி வழங்கி வருகிறோம். இதுவரை 3 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பாக இளைஞர்களுக்கு சமூக வலைதள பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில் இப்போது மண்டலம் 7, 8ல் சமூக வலைத்தளம் பயிற்சி நடைபெற இருக்கிறது. வருகிற 12ம் தேதி காலையில் போடி நாயக்கனூர், மாலையில் பெரியகுளம் (தேனி). 13ம் தேதி காலையில் நாகை, ஆண்டிப்பட்டி, மாலையில் கீழ்வேளூர் (திருக்குவளை), கம்பம். 14ம் தேதி காலையில் தென்காசி இலஞ்சி, மாலையில் கடையநல்லூரிலும் சமூக வலைத்தளம் பயிற்சி நடைபெற உள்ளது. அந்தந்த தொகுதி பாகங்களில் இப்பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் தவறாமல் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சட்டமன்ற தொகுதிவாரியாக திமுக பாக இளைஞர்களுக்கு சமூக வலைதள பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article