சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையின் சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் பட்டப்படிப்பு அல்லது 3 ஆண்டு சட்டப் பட்டப்படிப்பு முடித்த 17 சட்டப் பட்டதாரிகளுக்கென தலைமைச் செயலக சட்டத்துறையில் தன்னார்வ பயிற்சித் திட்டம் தொடங்கப்படும் என பேரவையில் அறிவிப்பாக வெளியிடப்பட்டது. இதற்கென, ஒரு சட்டப் பட்டதாரிக்கு ஒரு மாதத்திற்கு உதவித் தொகையாக ₹20,000 வீதம், 17 சட்டப் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2023-2024ம் வருடத்திற்கான பயிற்சியினை நிறைவு செய்த 17 தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு கடந்த 29ம் தேதி சட்டத்துறை அமைச்சரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தற்போது 2024-2025 வருடத்திற்கான சட்டத் துறையில் 17 தன்னார்வ பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கான நியமன ஆணையை நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
The post சட்டத்துறை தன்னார்வ பயிற்சியாளர்களுக்கு நியமன ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார் appeared first on Dinakaran.