சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்ற தொடங்கிய அமெரிக்கா

2 hours ago 1

வாஷிங்டன்,

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அந்நாட்டு ராணுவ விமானம் ஒன்று இந்தியா புறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விமானம் எப்போது அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது.

எப்போது இந்தியா வந்து சேகிறது போன்ற தகவல்கள் ஏதும் இல்லை. இந்நிலையில் இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறுகையில், "சி-17 விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது" என்றார். 205 பேர் அந்த விமானத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் சட்ட விரோதமாக வசிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Read Entire Article