'சச்சின்' படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் தாணு

3 hours ago 3

சென்னை,

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் 'சச்சின்'. இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கடந்த 18-ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 4 கே தரத்தில் வெளியான இப்படத்தை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் ரீ-ரிலீஸில் மாபெரும் வசூல் சாதனை செய்தது.

இந்த நிலையில், சச்சின் படத்தின் வெற்றியை குறித்து பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, மக்கள் இப்படத்தை இவ்வளவு பெரிய அளவில் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. திரையரங்குகளில் புதுப்படம் போல் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 2005-ம் ஆண்டில் வெளியானது போலவே மறுவெளியீட்டிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, நான் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க முடிவு செய்திருக்கிறேன். அதாவது, விரைவில் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'காக்க காக்க' ஆகிய படங்களை இந்த ஆண்டுக்குள் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளேன்.

அடுத்த ஆண்டில், ரசிகர்களின் விருப்பப்படி ரஜினிகாந்த்தின் 'கபாலி', விஜய்யின் 'தெறி', மற்றும் பாரதிராஜா இயக்கிய 'கிழக்கு சீமையிலே' ஆகிய படங்களை ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

Read Entire Article