'சச்சின்' படத்தின் வசூல் விவரம்.. ரீ-ரிலீஸில் இத்தனை கோடியா?

3 hours ago 1

சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2005-ம் ஆண்டு விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான 'சச்சின்' திரைப்படம் கடந்த 18-ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

'சச்சின்' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரீ-ரிலீஸான நிலையில், இத்திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சச்சின் திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Entire Article