சச்சின் தெண்டுல்கர் - ஜாக் காலிஸ் இருவரில் சிறந்த கிரிக்கெட்டர் யார்..? ஜோஸ் பட்லர் பதில்

8 hours ago 1

லண்டன்,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் பல ஜாம்பவான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அப்படி ஆதிக்கம் செலுத்திய வீரர்களை ஒப்பிட்டு யார் சிறந்தவர்? என்ற கேள்விகள் கேட்கப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் - தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் இருவரில் யார் சிறந்த கிரிக்கெட்டர்? என்று ஜோஸ் பட்லரிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பட்லர், "நான் காலிஸ் என்று சொல்லப் போகிறேன். ரிக்கி பாண்டிங், காலிஸ் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று நேரடியாக சொல்லியிருக்கிறார். அவரது சாதனைகளை ஒன்றாக சேர்த்தால் பேட்டிங்கில் சச்சினும், பந்துவீச்சில் ஜாகீர் கானும் விளையாடியதற்கு சமம். நீங்கள் ஒரு அணியைத் தேர்வு செய்ய முயற்சிக்கிறீர்கள் என்றால், அதில் அவரை தாண்டி பார்ப்பது மிகவும் கடினம்" என்று கூறினார்.

Read Entire Article