முதல்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டம் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்

12 hours ago 2

புதுடெல்லி,

ரூ.1 லட்சம் கோடி செலவில் அமல்படுத்தப்படவுள்ள, முதல் முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.உற்பத்தி துறையில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

வரும் 2 ஆண்டுகளில் நாட்டில் 3½ கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஊக்கத்தொகைகளை வழங்கும்.இந்தத் திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் ரூ.15,000 வரை கிடைக்கும் அதேபோல், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும், உற்பத்தித் துறைக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படும்.

4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் 5 திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதன் மொத்த பட்ஜெட் ரூ.2 லட்சம் கோடி ஆகும். இவற்றில், 1.92 கோடி பேர் முதன்முறையாகப் பணி அமர்த்தப்படுபவர்களாக, பணியிடத்தில் நுழைபவர்களாக இருப்பார்கள். இந்தத் திட்டத்தின் பயன்கள் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை உருவாக்கப்படும் வேலைகளுக்கு பொருந்தும்.

இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Read Entire Article