ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக ஆடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சன், நடப்பு தொடரில் முன்னணி ரன் குவிப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். முதல் 8 போட்டிகளில் அவர், 417 ரன்களை குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட், 150க்கும் மேல். இத் தொடரில், ஜோஸ் பட்லர், சுப்மன் கில் போன்ற முன்னணி வீரர்களை விட சிறப்பாக ஆடி வருகிறார் சாய்.
ஐபிஎல் போட்டிகளில், சாய் சுதர்சன், 33 இன்னிங்ஸ்களில் ஆடி 1451 ரன்களை குவித்துள்ளார். அவர், 1500 ரன்களை எட்டுவதற்கு இன்னும் 49 ரன்களே தேவை. இன்னும் ஓரிரு இன்னிங்ஸ்களில் அவர் 1500 ரன்களை கடந்தால், கிரிக்கெட் உலகின் மாபெரும் ஜாம்பவான் வீரராக கருதப்படும் சச்சின் டெண்டுகல்கர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட், 44 இன்னிங்ஸ்களில் 1500 ரன்களை கடந்த சாதனையை முறியடிப்பார்.
The post சச்சின் சாதனையை நெருங்கும் சாய் சுதர்சன் appeared first on Dinakaran.