
சென்னை
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஐதராபாத்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஐதராபாத் ரெயில்நிலையத்தில் (வண்டி எண்:07193) இருந்து வருகிற 24 மற்றும் 31, ஜூன் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கமாக கொல்லம் ரெயில்நிலையத்தில் (வண்டி எண்:07193) இருந்து வருகிற 26, ஜூன் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமை காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 5.30 மணிக்கு ஐதராபாத் ரெயில்நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலானது செகந்திராபாத், நல்கொண்டா, மிரியலகுடா, நதிகுடே, பிடுகுரல்லா, சட்டெனபள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல்,
நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டை ஆகிய ரெயில்நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.