சண்டை நிறுத்தம்; இந்தியா-பாகிஸ்தான் நேரடியாக பேசி எடுத்த முடிவு - ஜெய்சங்கர்

8 hours ago 2

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நெதர்லாந்து உள்பட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஒரு செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருவதற்கு அவர் பதில் அளித்தார். இது குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது:-

"2 நாடுகள் சண்டையில் ஈடுபடும்போது, மற்ற உலக நாடுகள் பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பது இயல்புதான். ஆனால், சண்டையை நிறுத்த எடுத்த முடிவு, இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக பேசி எடுக்கப்பட்ட முடிவு.

அமெரிக்காவுக்கு மட்டுமின்றி எங்களுடன் பேசிய எல்லா நாடுகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். சண்டையை நிறுத்த பாகிஸ்தான் விரும்பியது. அதை எங்களிடம் சொன்னது. அவர்களிடம் நாங்கள் பேசினோம். இதுதான் நடந்தது.

அதே சமயத்தில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுப்போம். அதனால்தான் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லி இருக்கிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article