பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், தற்போது நடித்துள்ள படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. அனில் ரவிபுடி இயக்கி இருக்கும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், உபேந்திரா லிமாயி, சாய்குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த நிலையில், வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் 9 நாட்களில் ரூ. 230 கோடி வசூல் செய்துள்ளது.
இப்படத்தின் டிக்கெட் விற்பனை அமோகமாக விற்பனையாகி இருப்பதால், விரைவில் ரூ.300 கோடி மைல்கல்லை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனாட்சி சவுத்ரி, தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் . சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' மற்றும் விஜய்யின் 'தி கோட்' ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார். குறுகிய காலத்திலேயே சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள இவர், 'லக்கி பாஸ்கர்' , மட்கா, உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 'அட்டகத்தி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் ,'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான ஏ.ஆர்.எம் படத்திலும், கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' படத்திலும் நடித்திருந்தார்.