'சங்கமித்ரா' படத்தின் அப்டேட் கொடுத்த சுந்தர்.சி

1 week ago 5

சென்னை,

நகைச்சுவை, காதல், பேய் படங்களை எடுப்பதில் பிரபலமான சுந்தர்.சி முதல் தடவையாக 8-ம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'சங்கமித்ரா' என்ற சரித்திர கதையை படமாக்குவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இதில் ரவி மோகன், ஆர்யா, சுருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதன் போஸ்டர்கள் 2017-ம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. இதில் 'பாகுபலி, பொன்னியின் செல்வன், கே.ஜி.எப்' படங்களுக்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகள் வைக்கவும் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஒரு சில பிரச்சினையால் படப்பிடிப்பு தொடங்காமல் கிடப்பில் போட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் சுந்தர். சி சங்கமித்ரா படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதாவது, "சங்கமித்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த படத்தை எடுக்க இரண்டு முதல் மூன்று வருடங்கள் தேவைப்படும் என்பதால் என்னுடைய கமிட்மெண்ட்களை முடித்த பின்னர் அதை தொடங்க முடிவு செய்து இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article