"சக்திமான்" படம் குறித்து இயக்குனர் பசில் ஜோசப் கொடுத்த அப்டேட்

1 week ago 3

மலையாளத்தில் வெளியான கோதா, மின்னல் முரளி உட்பட சில படங்களை இயக்கிய பசில் ஜோசப், தற்போது பல படங்களில் நடித்தும் வருகிறார். அதன்படி, 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே', 'குருவாயூர் அம்பல நடையில்' படங்களில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் இவர் அடுத்து இயக்கும் படத்தில் மோகன்லாலும் மம்முட்டியும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி மற்றும் பொன்மேன் மாபெரும் வெற்றியை பெற்றது. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மரணமாஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பசில் ஜோசப் இயக்கத்தில் 'சக்திமான்' படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. இந்தச் செய்தி இணையத்தில் வைரலானது.

இது தொடர்பாக சமீபத்திய நேர்காணலில் பசில் ஜோசப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார். "ரன்வீர் சிங் நடிப்பில் மட்டுமே 'சக்திமான்' உருவாகும். இது தொடர்பாக வதந்திகளை பரப்புபவர்கள் நிச்சயமாக அவர்களின் சுயலாபத்துக்காக செய்கிறார்கள்" என்றார். இதன் மூலம் 'சக்திமான்' படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

'சக்திமான்' படத்தில் ரன்வீர் சிங் - பசில் ஜோசப் கூட்டணி இணையவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்படம் கைகூடவில்லை. பசில் ஜோசப் அளித்துள்ள பேட்டியின் மூலம், விரைவில் அப்படம் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article