திருட வந்த வீட்டில் தூங்கியதால் போலீசாரிடம் மாட்டிக்கொண்ட திருடன்

6 hours ago 3

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் பிரிடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசராவ். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணா என்ற வாலிபர் நைசாக சீனிவாசராவ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார்.

அங்கிருந்த வெள்ளிப்பொருட்களை திருடிய அவர், அதை கடையில் விற்றார். அதன்மூலம் கிடைத்த பணத்திற்கு மது அருந்தினார். பின்னர் கொள்ளையடித்த வீட்டுக்கே வந்து நன்றாக தூங்கி விட்டார்.

இதற்கிடையே சீனிவாசராவ் மறுநாள் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன. வீட்டுக்குள் கிருஷ்ணா நிம்மதியாக தூங்கிக்கொண்டு இருந்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கிருஷ்ணாவை எழுப்பி கைது செய்தனர்.

கைதான கிருஷ்ணாவை போலீசார் வேனில் ஏற்றியபோது, வேனிலும் அவர் படுத்து தூங்க முயன்றார். உடனே போலீசார் அவரை நையப்புடைத்து சிறையில் அடைத்தனர். 

Read Entire Article