முழுமையாகவே எழுத்து வேலைகள், மெயில், குறுஞ்செய்திகள் என உதவும் ஒரு Ai. Claude.Ai அல்லது Claude செயலி பொதுவாக கட்டுரைகள், நாவல்கள், கதைகள், பத்திரிகை துறைகளில் வேலை செய்வோருக்கு வரப்பிரசாதமான ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி. குறிப்பாக மாணவர்களுக்கு அவர்களின் பாடம் சார்ந்த விளக்கங்கள், டேட்டாக்கள், சிறப்பு கட்டுரையாக்க செயல்கள், அசைன்மெண்ட்கள் என அனைத்திற்கும் இந்தச் செயலி உதவும். மேலும் கோடிங்கில் ஏராளமான பயன்கள் க்ளாட் கொடுக்கும். போலவே இதன் ஒரு நாள் பயன்பாடு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் அதற்குள் போதிய உதவிகளை வழங்கும் திறன் கொண்ட செயலி.