கோவையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் போராட்டம்: தனியார் வசம் சென்றால், அரசு சலுகைகள் பறிபோகும் என குற்றச்சாட்டு

5 hours ago 2

கோவை: வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை வன அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்பு காவலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி, ஆனைமலை, முதுமலை, விருதுநகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் வேட்டை தடுப்பு காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காடுகளையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

இவர்களுக்கு வனத்துறை சார்பில் ரூ.12,500 மாத ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் பழங்குடியின இளைஞர்கள் தான் உள்ளனர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தால் வன காப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு அரசு வேலை கிடைத்து வந்தது. இதனிடையே வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க வனத்துறை முடிவு செய்துள்ளதாக வேட்டைத் தடுப்பு காவலர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

இதற்கு எதிப்பு தெரிவித்து கோவையில் மாவட்ட வன அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்பு காவலர்கள் முற்றுகையிட்டனர். ஏற்கனவே தேனியில் வேட்டைத் தடுப்பு காவல் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்பது அவர்களது புகார். இந்த நிலையில் கோவை வன அலுவலகத்துக்கு சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வேட்டைத் தடுப்பு காவலர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் முத்தரசன் தலைமையில் வன பாதுகாவலர்களிடம் வேட்டைத் தடுப்பு காவலர்கள் மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே வேட்டைத் தடுப்பு காவலர்களின் கோரிக்கையாக உள்ளது.

The post கோவையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் போராட்டம்: தனியார் வசம் சென்றால், அரசு சலுகைகள் பறிபோகும் என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article