சென்னை,
கோவை சாய்பாபா கோவில் கேட் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியில் ஒருவித ரசாயன பொடியை தூவிய உடன் கார் கண்ணாடி சத்தம் இல்லாமல் உடைகிறது. உடனே உள்ளே இருந்த பையை ஒருவன் திருடி செல்கிறான். இது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள பதிவில், 'இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. மராட்டியத்தில் எடுக்கப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உண்டிக்கோல் வைத்து உடைத்து திருடிய சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவை தமிழ்நாடு என்று பரப்பி வருகின்றனர்' என்று கூறப்பட்டு உள்ளது.