கோவையில் மாநில அளவிலான கேரம் போட்டி

3 weeks ago 5

 

கோவை, டிச.28: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 64 வது மாநில அளவிலான கேரம் போட்டிகள் நேற்று துவங்கியது. 3 நாட்களுக்கு நடைபெறும் இப்போட்டிகளை, தமிழ்நாடு கேரம் அசோசியேசன்ஸ், கோவை மாவட்ட கேரம் அசோசியேசன்ஸ் மற்றும் அக்கல்லூரியின் உடற்கல்வி துறை இணைந்து நடத்துகின்றன. 50 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் பிரிவும், 15 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவு என இரண்டு பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட கேரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டிகளை அர்ஜீனா விருது பெற்ற மரியா இருதயம், அகில இந்திய கேரம் அசோசியேசன் துணை தலைவர் நாசர்கான், முதல் உலக கேரம் சாம்பியன் நடராஜ், அக்கல்லூரியின் செயலாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். இதையடுத்து கேரம் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

The post கோவையில் மாநில அளவிலான கேரம் போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article