கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்... மாணவர்கள் வெளியேற்றம்

5 months ago 38

கோவை,

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கு இன்று காலை இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், பள்ளி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர். இது குறித்த தகவல் பரவிய நிலையில் பெற்றோரும் அங்கு கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.

Read Entire Article