கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு

3 months ago 17

பேரூர்,

கொங்கு மண்டலத்தில் உள்ள சிவன் தலங்களில் 1,800 ஆண்டு பழமையானது பேரூர் பட்டீசுவரர் கோவில். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா, இன்று (திங்கட்கிழமை) காலை 9.15 மணியிலிருந்து 10.15 மணிக்குள் நடக்கிறது.

இதையொட்டி பக்தர்களின் வசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, இன்று அதிகாலை 4 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக பேரூர் காவல்துறை அறிவித்திருந்தது.

அதன்படி பேரூருக்கு மேற்கே தொண்டாமுத்தூர் ஆலாந்துறை, மாதம்பட்டி, செம்மேடு, பூண்டி, காருண்யா நகர் ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து வரும் பஸ், லாரி, கார், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், பேரூர் செட்டிபாளையம் அருகே கோவைப்புதூர் மெயின்ரோடு வழியாக திருப்பி விடப்படுகிறது.

இதே போல் காந்திபுரம், ரெயில்நிலையம், டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி, பேரூர் மெயின் ரோட்டின் வழியே வரும் பஸ், லாரி, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் செல்வபுரம் சிவாலயா பஸ் ஸ்டாப் அருகே புட்டுவிக்கி வழியாக சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு வழியாக திருப்பி விடப்படுகிறது. கும்பாபி ஷேகத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்தில் இந்த மாற்றம் இருக்கும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

கும்பாபிஷேக விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Read Entire Article