
கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் தனியாக வசித்த 70 வயது மூதாட்டியை கடந்த 2021-ம் ஆண்டு ஆதாயத்திற்காக கொலை செய்த குற்றத்திற்காக சுப்பிரமணியன் மகன் கருப்பையா(எ)வினோத் (வயது 25) மீது தடாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் விசாரணை நேற்று (28.03.2025) முடிவு பெற்று மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளி கருப்பையாவுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500 அபராதம் விதித்து அவர் உத்தரவிட்டார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை செய்த அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் தமிழரசன் ஆகியோரை கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் பாராட்டினார்.