கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் போராட்டம் 

2 hours ago 1

கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் இன்று (பிப்.7) மன்ற கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மன்ற கூட்டத்தில் திமுக எம்.பி அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆவேசமாக பேசினார்.

கோவை மாநகராட்சி மன்ற கவுன்சிலர் கூட்டம் இன்று (பிப்.07) டவுன்ஹாலில் உள்ள பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள மன்ற அரங்கில் நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். ஆணையர் சிவகுரு பிரபாகரன் , துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் கலந்து கொண்டார்.

Read Entire Article