கோவை: மழைநீர் தேங்கிய சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து

4 months ago 25

கோவை,

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.நேற்று காலை முதலாகவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது.

நேற்று கோவை சாய்பாபா காலனி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது. பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், கோவையில் நேற்று தனியார் பேருந்து மூழ்கிய அதே இடத்தில் இன்று மழைநீரில் அரசுப்பேருந்து சிக்கியது. பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

Read Entire Article