கோவை: பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்

7 months ago 24

கோவை,

நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, சூர்யா-43 என்ற புதிய படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 15 நாட்கள் நடைபெற உள்ளது. படப்பிடிப்பின் முதல் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு நடிகர் சூர்யா கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு திடீரென வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்து, பட்டீசுவரரை தரிசனம் செய்தார். மேலும் கோவில் வெளிப்புறத்தில் உள்ள கொடிமரம் முன்பு, சாஷ்டாங்கமாக கீழே விழுந்து கும்பிட்டார்.

இதற்கிடையே சூர்யாவை காண ரசிகர்கள் திரண்டனர். இதனால் 15 நிமிடத்திற்கு உள்ளாக தரிசனத்தை முடித்துவிட்டு, நடிகர் சூர்யா புறப்பட்டுச் சென்றார். அப்போது, கோவில் அலுவலக ஊழியர்கள் சீனிவாசன், விவேகானந்தன், ஞானவேல் மற்றும் சிவாச்சல குருக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read Entire Article