
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டயர் குடோன் ஒன்று அமைந்திருந்தது. இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய டயர்கள் எரிந்து சேதமாகின. இது குறித்து தகவலறிந்து வந்த சூலூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.