கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5ம் தேதி வரை மூவருக்கு நீதிமன்ற காவல்

3 weeks ago 3

பூந்தமல்லி: கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5ம் தேதி வரை மூவருக்கு நீதிமன்ற காவல் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின்(28), என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை போலீஸ் காவலிலும் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கோவை உக்கடத்தைச் சேர்ந்த அபு அனிபா, பாவாஸ் ரகுமான், சரண் உள்ளிட்ட மூன்று பேரை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை விசாரித்த நீதிபதி மூன்று பேரையும் நவம்பர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5ம் தேதி வரை மூவருக்கு நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Read Entire Article