கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் நான்காவது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஷேக் இதயத்துல்லா, உமர் பரூக், பவாஸ் ரகுமான், சரண் மாரியப்பன், அபு ஹனீஃபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தீவிரவாதத்துக்கு நிதி திரட்டியதாக 5 பேர் மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளது. மொத்தமாக இதுவரை 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
The post கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம்: மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்ஐஏ appeared first on Dinakaran.