சென்னை,
நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"கோயம்புத்தூர் மண்டலம், கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து நொய்யல் கால்வாய்க்குட்பட்ட பாசன நிலங்களுக்கு 23.01.2025 முதல் 28.02.2025 வரையிலான 37 நாட்களில் முறைவைத்து 24 நாட்களுக்கு இரண்டு சிறப்பு நனைப்பிற்கு (Special Wetting) மொத்தம் 196.992 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் ஆகிய வட்டங்களிலுள்ள 19480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.