கோவில்பட்டியில் விற்பனைக்காக 22 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

5 hours ago 2

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீஹா தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இன்பராஜ் மற்றும் போலீசார் நேற்று (30.4.2025) கோவில்பட்டி மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனாம் மணியாச்சி டவர் அருகில் சந்தேகப்படும்படி இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கயத்தாறு பணிக்கர்குளம் பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் இசக்கிமுத்து (வயது 21), நெல்லை தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் ரஞ்சித் (22) மற்றும் ஒரு இளஞ்சிறார் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் மேற்சொன்ன 2 பேரை கைது செய்தும், இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தும், அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article