பாகிஸ்தான் நடிகர்-நடிகைகளின் இன்ஸ்டாகிராம் இந்தியாவில் முடக்கம்

2 hours ago 3

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரின் சமூக வலைத்தள பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஹனியா அமிர், மஹிரா கான் உள்ளிட்ட பல பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இவர்களை பின்தொடர்பவர்களால் அவர்களின் இன்ஸ்டா பக்கங்களை அணுக முடியவில்லை. பாகிஸ்தானிய பிரபலங்கள் அலி ஜாபர், சனம் சயீத், பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், இம்ரான் அப்பாஸ், சஜல் அலி ஆகியோரின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயி் அக்தர் யூடியூப் சேனலும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

Read Entire Article