கோவில்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

4 months ago 11

கோவில்பட்டி, ஜன. 8: கோவில்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆவல்நத்தம் விலக்கு அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்த 3 பேரை தடுத்துநிறுத்தி சோதனையிட்டதில் மூவரும் 150 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பைக்குடன் பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் மேற்கு காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த செண்பகராஜ் மகன் மருதுபாண்டி (29), ஓட்டப்பிடாரம் மேலமுடிமண் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் இசக்கி சங்கர் (20), பசுவந்தனை கீழமங்கலத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் முத்துராஜ் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர்.

The post கோவில்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article