கோவில்பட்டியில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

5 hours ago 2

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் தெற்கு தெருவை சேர்ந்த அருண்ராஜ் (வயது 30), அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த ஓட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கடந்த 2ம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர், உறவினர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Read Entire Article