கோவில் அருகே கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் - திருச்சியில் பரபரப்பு

2 months ago 14

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூரில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் அருகே காவிரி ஆற்றின் படித்துறை உள்ளது. இந்த படித்துறையில் இன்று மாலை ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஜீயபுரம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், ராக்கெட் லாஞ்சரை பத்திரமாக கைப்பற்றி வெடிகுண்டு சோதனை நிபுணர்களிடம் ஒப்படைத்தனர். நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. ஒக்கேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அந்த நீரில் ராக்கெட் லாஞ்சர் அடித்து வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article