திருச்செங்கோடு, அக்.15: தமிழ்நாடு கோவம்ச முன்னேற்ற நலச்சங்க (ஆண்டிப்பண்டாரத்தார் பிரிவு) கூட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நடராஜன் தலைமை தாங்கினார். கந்தசாமி, பெரியசாமி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கல்வியாளர் அணி செயலாளர் ஆசிரியர் செந்தில்முருகன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் தர்மலிங்கம், மாநிலத்தலைவர் கலையரசன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் கிராம கோயில்களில் பணிபுரிந்து 60 வயதை கடந்த ஓய்வு பெற்ற பூசாரிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தி தரவேண்டும். கிராமக் கோயில்களில் பணிபுரிந்து, 60 வயதை கடந்த பூசாரிகளின் வாரிசுகளுக்கு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பழனிசாமி, கல்யாணசுந்தரம், ஆடிட்டர் கிருஷ்ணன், கௌசல்யா கிருஷ்ணன், தங்கமணி, சுந்தரம், சுந்தரம், முத்துக்குமார், குமாரசாமி, மனோகரன், சுப்ரமணி, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post கோவம்ச முன்னேற்ற நலச்சங்க கூட்டம் appeared first on Dinakaran.