கோரிக்கை வைத்த மாணவியின் கையாலேயே கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்ட பேருந்து சேவை!

1 month ago 6

விழுப்புரம்: பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு சுமார் 5 கி.மீ நடந்து செல்ல வேண்டியுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அரசு பள்ளி மாணவி தர்ஷினியின் கோரிக்கையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உடனடியாக நிறைவேற்றினர். மாணவியின் ஊரான அம்மணம்பாக்கம் முதல் அனந்தமங்கலம் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள பேருந்தினை தர்ஷினியே கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது;

சமீபத்தில் ‘ZEE தமிழ்’ தொலைக்காட்சியில் நடைபெறும் “சரிகமப “ இசை நிகழ்ச்சியில் பங்குபெற்ற தர்ஷினி என்ற மாணவி, பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டு 5 கி.மீ தூரம் நடந்து செல்வதை சொன்னதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், அம்மணம்பாக்கம் கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் அம்மணம்பாக்கம் முதல் அனந்தமங்கலம் வரை வழித்தடத்தில் பேருந்து சேவையினை, பள்ளி மாணவி தர்ஷினி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் சேகர், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் குணசேகரன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

The post கோரிக்கை வைத்த மாணவியின் கையாலேயே கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்ட பேருந்து சேவை! appeared first on Dinakaran.

Read Entire Article