கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: ஓபிஎஸ் தம்பியை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

4 months ago 15

திண்டுக்கல்: பெரியகுளம் அருகே கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (22). இவர் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்தார். இவர், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக தனது தற்கொலைக்கு கோயில் அறங்காவலர்களாக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா, லோகு, சரவணன், ஞானம், மணிமாறன், சிவக்குமார், பாண்டி ஆகிய ஏழு பேர் தான் காரணம் என கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

Read Entire Article