கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு; பயணியை இழுத்துச்சென்று தாக்கிய டிரைவர், கண்டக்டர், டைம் கீப்பர்: வீடியோ வைரலால் அதிர்ச்சி

1 week ago 4

அண்ணாநகர்: சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சரவணகுருநாதன்(40). இவர் கிண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். தினமும் கிண்டியில் இருந்து பஸ் மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து பூந்தமல்லிக்கு சென்றுவந்தார். நேற்றுமுன்தினம் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து பூந்தமல்லி செல்லும் பஸ்சுக்காக காத்திருந்துள்ளார். அப்போது பூந்தமல்லிக்கு செல்லும் தடம் எண் 101 பேருந்து வந்தபோது சரவணகுருநாதன் ஓடிவந்து ஏற முயன்றபோது அதற்குள் பேருந்து நிற்காமல் வேகமாக சென்றுவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து கோபம் அடைந்த சரவணகுருநாதன், டைம் கீப்பரிடம் சென்று கேட்டு வாக்குவாதம் செய்து உள்ளதாக தெரிகிறது. அப்போது டைம் கீப்பர், சரவணகுருநாதனின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்துவந்து தாக்கியுள்ளார்.

இதை பார்த்ததும் கண்டக்டர், டிரைவர் ஆகியோர் ஓடிவந்து காலால் எட்டி உதைத்தபோது சரவண குருநாதன் கதறியுள்ளார். இதுபற்றி தட்டிக்கேட்ட சில பயணிகளையும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதன்பிறகு சரவணகுருநாதன் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது; பயணி மீது தாக்குதல் நடத்திய அரசு ஊழியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே பயணிகள், அரசு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தால் அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு பயணியை சரமாரியாக தாக்கிய சம்பவம் குறித்து ஏன் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

 

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு; பயணியை இழுத்துச்சென்று தாக்கிய டிரைவர், கண்டக்டர், டைம் கீப்பர்: வீடியோ வைரலால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article