சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த இரண்டு வாரமாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.70க்கு விற்கப்பட்ட நிலையில் மழை, விளைச்சல் பாதிப்பு காரணமாக பிற மாவட்டங்கள் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்ததால் தக்காளி விலை எகிறியது. கோயம்பேடுக்கு நாள் ஒன்றுக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும் நிலையில் நேற்று வரை 40 லாரிகளில் மட்டுமே வரத்து இருந்தது.
இதனால் சில்லறையில் தக்காளியின் விலை நேற்று ரூ.90 உயர்ந்தது. இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு 50 லாரிகளில் தக்காளி கொண்டுவரப்பட்டதால் நேற்றைய விலையில் இருந்து ரூ.15 குறைந்து ஒரு கிலோ தக்காளி விலை ரூ.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியை தவிர்த்து பிற காய்கறிகளின் விலையில் பெரிதாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கும், சின்ன வெங்காயம் ரூ.60க்கும், கேரட் ரூ.40க்கும், அவரைக்காய் ரூ.70க்கும் விற்கப்படுகிறது. பீன்ஸ் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.35, முருங்கை ரூ.80, வெண்டைக்காய் ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம்: சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.75க்கு விற்பனை!! appeared first on Dinakaran.