கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்

19 hours ago 1

ஜோதிடத்தில் ஒரு பழமொழி உண்டு. நாள் செய்யாததை கோள் செய்யும் என்பது. அவ்வாறே, கோள்கள் செய்ய வைப்பதைக் கோயில்களும் செய்யும் என்பதாகும். ஒவ்வொரு கோயில்களும் ஒவ்வொரு ஸ்தல புராணத்தையும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஆற்றலையும் தாங்கி இருக்கின்ற இறை ஸ்வருபம் என்றால் மிகையில்லை. இறை ஆற்றலானது இக்கோயிலுக்குள் இறை ஸ்வருபமாக உள்ளது. இந்த இறை ஸ்வருபத்தின் முன் சில நன்மைகள் அடையலாம் என்பது முன்னோர்கள் அனுபவத்தில் சொல்லிச் சென்ற ரகசியம். அதை அறிந்து நாம் நம் நன்மைகளை பெறுவோம்.

சீதா தேவி கருவுற்ற சமயத்தில் பல காரணங்களால் ராமனை பிரிந்திருந்தாள், அப்போது வனவாசத்தில் வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கியிருந்தாள். இவருடைய ஆசிரமத்தில் சீதாதேவி லவன் – குசனை பெற்றெடுத்தாள். நெடுங்காலமாக ராமரைப் பிரிந்திருந்தாள் சீதாதேவி. குழந்தைகளும் பெரியவர்களாக வளர்ந்துவந்தனர்.

அதே தருணத்தில் அயோத்தியில் ராமர் அஸ்வமேத யாகம் நடத்தினார். யாகம் முடிந்து ராமரின் குதிரை தற்போது கோயம்பேடு என்று அழைக்கப்படும் இடத்தை அடைந்தது. யாகம் பூஜையில் குதிரையை சேர்க்க வேண்டும். குதிரையைத் தேடி ராமரின் படைகள் சென்றன. இங்கு வந்த குதிரையை லவனும் குசனும் பிடித்து வைத்தனர். ராமரின் படைகள் இவர்களுடன் போர் செய்து தோற்றுப்போனது. பின்பு லட்சுமணனும் வந்து போரிட்டு லவ-குசா ஆகியோரிடம் தோற்றார். இறுதியாக ராமர் வரவே இளவரசர்கள் ராமரை எதிர்க்கத் துணிந்தனர்.

அப்போதுதான் வால்மீகி முனிவர் தங்கள் சொந்த தந்தையுடன் தாங்கள் போரிடப் போவதை உணர்த்தினார். இதற்கு பின்புதான் ராமர் – சீதாதேவி மீண்டும் சேர்ந்தனர் என்கிறது புராணம்.

♦ இக்கோயிலுக்குச் சூரியன், செவ்வாய், சனி கிரகங்கள் நாமா கரணம் செய்துள்ளன.

♦ பிள்ளைவரம் வேண்டுவோர் இக்கோயிலுக்கு புனர்பூசம் நட்சத்திரத்தன்று மஞ்சள் பட்டுநூலை சுவாமி முன் வைத்து அர்ச்சனை செய்து ஸ்தல விருட்சத்தில் கட்டிவிட்டு கோயிலில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பான நெய்வேத்தியத்தை வழங்கினால் புத்திரப் பேறு உண்டாகும்.

♦ சுகப்பிரசவம் ஏற்படுவதற்கும் நீதிமன்ற வழக்குகளில் நிலுவையில் உள்ளவர்கள் பூச நட்சத்திரத்தன்று நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்து கருப்புநிறப் பசுவிற்கு உணவுத் தானம் கொடுத்து வந்தால் நல்ல தீர்வுகள் உண்டாகும்.

♦ இங்குள்ள சுவாமிக்கு அஸ்வினி நட்சத்திரத்தன்று அறுகம்புல் மாலை சாற்றினால் சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

♦ யாருக்கு சூரியன், செவ்வாய் மற்றும் சனி இணைவு உள்ளதோ அவர்கள் அடிக்கடி நமக்கு யாரேனும் செய்வினை செய்து விட்டார்களோ என்ற சந்தேகமோ அல்லது அச்சமோ உண்டாகும். அவர்கள் இங்குள்ள சரபேஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் அதாவது மாலை 4.30 – 6.00 மணிக்கு இங்கு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.

♦ யார் வீட்டில் தந்தை – மகனுக்கு பிரச்னை ஏற்பட்டு மனஸ்தாபம் ஏற்பட்டதோ அவர்கள் இங்கு வந்து உத்திரம் நட்சத்திரத்தன்று சுவாமிக்கு கோதுமையில் செய்த இனிப்பை படைத்து அவர்கள் பெயர் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் மீண்டும் சமரசம் உண்டாகும்.

The post கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் appeared first on Dinakaran.

Read Entire Article