கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

2 months ago 14

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம் கோமுகி அணையிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பழைய பாசனப் பரப்பு 5,860 ஏக்கர் நிலங்களும் மற்றும் புதிய பாசனப் பரப்பு 5,000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நாளை(25.10.2024) முதல் 29 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் வட்டம் கோமுகி நதி அணையிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பழைய பாசனப் பரப்பு 5,860 ஏக்கர் நிலங்களும் மற்றும் புதிய பாசனப் பரப்பு 5,000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article