கோப்பை வழங்கும் நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில்லை? - சோயப் அக்தர்

3 hours ago 1

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது. வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர் சோயப் அக்தர் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பரிசளிக்கும் விழாவில் பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். பாகிஸ்தான் சார்பாக எந்த ஒரு நிர்வாகியும் இடம்பெறவில்லை. இதுதான் தற்போது சர்ச்சையில் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ள சோயப் அக்தர் கூறியதாவது, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதில் மிக்க மகிழ்ச்சி.

ஆனால், அங்கு நான் ஒரு வினோதமான விஷத்தைக் கவனித்தேன். போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு நிகழ்வில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எந்த பிரதிநிதியும் அங்கே இருக்கவில்லை. பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது. ஆனால், பாகிஸ்தானிலிருந்து எந்த பிரதிநிதிகளும் ஏன் இறுதிப்போட்டிக்குச் செல்லவில்லை என்பது என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

கோப்பையை வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த யாராவது சென்றிருக்க வேண்டும்தானே?. இது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. உலக அரங்கில் கவனம் பெறும் இந்த நிகழ்வில் பாகிஸ்தான் சார்பில் யாராவது இருந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article