கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் மேக மூட்டத்துடன் கூடிய மழை

3 weeks ago 4

 

கோத்தகிரி, அக்.21: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் கூடிய மிதமானது மழை பெய்தது. கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நேற்று காலை முதல் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்தது. இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வந்தது. நேற்று காலை முதலே சாரல் மழை பெய்யத் துவங்கி பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் மிதமான முதல் கனமழை பெய்தது.

குறிப்பாக நேற்று முன்தினமும், நேற்றும் காலை முதலே கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமானது முதல் சாரல் மழை பெய்தது. கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வெஸ்ட் புரூக், கட்டபெட்டு, பாக்கிய நகர், அம்பேத்கர் நகர், பேரார், மைனலை உள்ளிட்ட பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர் செல்லக்கூடிய மலைப்பாதையில் சாலைகளில் மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் பகல் நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்ள வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இரு புற திசை விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்கி சென்றனர்.  இதைத்தொடர்ந்து காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவியதால் மாலை நேரங்களில் பணிக்கு சென்று வீடு திரும்புவோர் கடும் குளிரில் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

The post கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் மேக மூட்டத்துடன் கூடிய மழை appeared first on Dinakaran.

Read Entire Article