கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

4 hours ago 3

ஊட்டி : நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோத்தகிரி அருகே கரிக்கையூர் பழங்குடியின கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாலமுருகன் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பு 39அ, சமூகத்தின் வறிய மற்றும் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவை வழங்க வகை செய்து அனைவருக்குமான நீதியை உறுதி செய்கிறது.

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற அடிப்படையில் நீதி வழங்கும் சட்டமுறை ஆகியவற்றை உறுதி செய்வதை அரசுக்கு கடமையாக்குகின்றன.
1987ம் ஆண்டில் சம வாய்ப்பு அடிப்படையில் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகள் வழங்க தேசிய சட்டப்பணிகள் ஆணையம் நிறுவப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் கொள்ளைகள், கோட்பாடுகள்,வழிகாட்டிகள் மற்றும் திறம்பட செயல் திட்டங்களை நிறைவேற்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாற்றி வருகிறது.

இதன்படி தகுதியுள்ள நபர்களுக்கு இலவச மற்றும் தகுந்த சட்டப்பணிகள் வழங்குதல், தகராறுகளை இணக்கமாக சமரசம் செய்ய மக்கள் நீதிமன்றங்கள் அமைத்தல், சமுதாயத்தில் நலிந்த மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் உரிமைகள் பற்றிய சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் ஆகும்.

பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினர், அரசியலைப்பு சட்டப்பிரிவு 23ல் குறிப்பிட்ட மனிதர்களை விற்பதும், வாங்குவதும், வற்புறுத்தி வேலை வாங்குவதால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது பிச்ைச எடுப்பவர்கள்.

பெண்கள், குழந்தைகள். மாற்று திறனாளிகள், பேரழிவு, இன வன்முறை, சாதி வன்கொடுமை, வெள்ளம், பஞ்சம், நில அதிர்ச்சி, தொழில் அழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

தொழிற்சாலை தொழிலாளர்கள், சிைற காவலில் இருப்போர், பாதுகாப்பு இல்லத்தில் உள்ள இளம் குற்றவாளிகள், மனநல மருத்துவமனை, மனநோய் மருத்துவமனை மற்றும் இல்லம் இவைகளில் காவலில் உள்ளவர்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் இலவச சட்ட சேவைகளை பெற தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

இதுதவிர சிறைகளுக்கு வழக்கறிஞர்களை அனுப்பி அங்குள்ள சிறைவாசிகளுக்கு சட்ட உதவி வழங்குதல், குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களை நியமித்து கைது செய்யப்பட்டு முன் நிறுத்தப்படுவோருக்கு சட்ட உதவி வழங்குதல், மக்கள் கூடும் இடங்களில் சட்ட உதவி மையங்களை அமைத்து மக்களுக்கு சட்டம் உதவி வழங்குதலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மேற்கொள்கிறது. ஒவ்வொருவரும் சட்டம் குறித்த அறிவை பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

சட்டத்தின் துணை கொண்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். சட்ட உதவி மற்றும் ஆலோசனைக்கு ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நேரில் அணுகலாம். இவ்வாறு அவர் பேசினார்.

The post கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article