பாலக்காடு, மே 5: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல்லை அடுத்த சங்குவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சலவி. இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ஆயிஷா தஷ்னி (9). தனியார் பள்ளி 4வது படித்து வந்தார். பள்ளி கோடை விடுமுறை என்பதால் அரபிமொழி பாடப்படிப்பிற்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். சக மாணவிகளுடன் வீட்டின் முன்பாக உள்ள பலா மரத்தடியில் விளையாடியுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பலாப்பழம் மரத்திலிருந்து ஆயிஷா தஷ்னியின் தலையில் வீழுந்தது. இதில் நிலைகுலைந்து அருகிலுள்ள பாறை மீது அவர் விழுந்துள்ளார். உடனே அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு கோட்டக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா தஷ்னி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
The post கோட்டக்கல் அருகே பலாப்பழம் விழுந்து 9 வயது சிறுமி பலி appeared first on Dinakaran.